logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் தேவையான வசதிகளுடன் விரைவில் செயல்பட நடவடிக்கை

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் தேவையான வசதிகளுடன் விரைவில் செயல்பட நடவடிக்கை - மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் ஜி.பிரகாஷ் தகவல்


கோவில்பட்டி நகராட்சியில் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஜி.பிரகாஷ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்., உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். 

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் , தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஜி.பிரகாஷ், கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலையத்தினை ஆய்வு செய்தார்.

 அதனைத்தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சி தாலுகா அலுவலகம் அருகில் கோவில்பட்டி 2ம் குடிநீர் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை பார்வையிட்டார். அங்கு 2ம் திட்ட குடிநீர் விநியோக பணிகளுக்காக கட்டப்பட்டுள்ள 14 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா குறித்து ஆய்வு செய்தார். மேலும் புதிய குடிநீர் இணைப்பு வழங்க குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை விரைவுபடுத்தி 1 மாத காலத்திற்குள் முழுமையாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என நகராட்சி அலுவலர்கள், குடிநீர் வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து கயத்தாறு, கோவில்பட்டி பல்வேறு ஒன்றிய கிராம பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் 248 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் குடிநீர் திட்ட பணிகளில் ஒரு சில பகுதிகளில் இணைக்க வேண்டிய இணைப்புகளை உடனடியாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.அதனைத்தொடர்ந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.10.50 கோடி மதிப்பிட்டில் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் பிரசவ மற்றும் குழந்தை பராமரிப்பு கட்டிடத்தினை நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு டைல்ஸ் ஒட்டும் பணிகள் மற்றும் கட்டிட பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சமுக பொறுப்பு நிதி ரூ.1 கோடியில் நிறுவப்பட்டு வரும் ஆக்சிசன் ஜெனரேட்டர் நிறுவும் பணிகளை பார்வையிட்டார். மேலும் அங்கு சமுக பொறுப்பு நிதியில் அமைக்கப்பட்டுள்ள 125 கோவி மின்னோக்கியை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான சிதம்பராபுரம் உரக்கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை செய்யப்படும் பணிகளையும், செப்டிக் டேங்க் கழிவுகள் மூலம் உரம் தயாரிக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு அதிக அளவு பழ மரக்கன்றுகளை நட்டு பராமரிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

தனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநருமான ஜி.பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்

கொரோனா 3வது அலை தடுப்பு சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் போதிய அளவிலான களப்பணியாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா 3 வது அலை தடுப்பு தொடர்பாக முதல்வர் பல்வேறு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதிலும் அவசர கால பணிகள், கோவிட் கேர் சென்டர், ஆக்சிஜன் படுக்கைகள் இருப்பு போன்ற தொழில் நுட்ப ரீதியாலான ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. 3வது அலையை தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை,உள்ளாட்சி துறை அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் தேவையான வசதிகளுடன் விரைவில் செயல்படும் என்றார்

இந்த ஆய்வின்போது கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், கோவில்பட்டி நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் முத்து பழனியப்பன், செயற்பொறியாளர்கள் செந்தூர்பாண்டியன், விஸ்வலிங்கம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் சசிரேகா, கோவில்பட்டி நகராட்சி பொறியாளர் .கோவிந்தராஜ், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.முருகவேல், கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.அனிதா, கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.கமலவாசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெள்ளைச்சாமிராஜ், உதவி செயற்பொறியாளர் மின்பணி ராமலிங்கம், உதவி பொறியாளர்கள் பரமசிவம்,வித்யாசாகர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

96
14790 views
1 shares

Comment