logo

கோவில்பட்டி இன்னர் வீல் கிளப் மற்றும் வி.பி.கே.கடலைமிட்டாய் கம்பெனியும் இணைந்து நடத்திய கொரோனா விழ

கோவில்பட்டி இன்னர் வீல் கிளப் மற்றும் வி.பி.கே.கடலைமிட்டாய் கம்பெனியும் இணைந்து நடத்திய கொரோனா விழிப்புணர்வு முகாம்.


கோவில்பட்டியில் வி.பி.கே கடலை மிட்டாய் கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அதன் அருகேயுள்ள சிங்கப்பூர் காலனி பகுதியில் உள்ளவர்களுக்கும் கொரோனா குறித்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் விஷ்ணுபிரியா வரவேற்புரை வழங்கினார். இன்னர்வீல் கழகத் தலைவர் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்,சிறப்பு விருந்தினராக அரசு பொது மருத்துவமனை சித்த மருத்துவர் டாக்டர். அபிநயா கலந்து கொண்டு கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை நமது உடலில் உருவாக்க தடுப்பூசி அவசியம் என்பதையும் முகக் கவசம், சமூக இடைவெளி, கை சுத்தம் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்குமாறும் வலியுறுத்தினார்.

மேலும் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் விளக்கமளித்தார். வி.பி.கே. கம்பெனி உரிமையாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். இன்னர் வீல் கழக செயலாளர் விநாயக சுந்தரி ,ஐ.எஸ்.ஓ.
உஷா, மணிமொழி நங்கை, ஜெஸ்மின், ஷெர்லி டுவிங்கிள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியை இன்னர் வீல் கழக நிர்வாக உறுப்பினர் மணிமேகலை ஏற்பாடு செய்திருந்தார்.நிகழ்வின் இறுதியாக இன்னர்வீல் கழக துணைச்செயலர் ஜெயா ஜனார்த்தனன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

7
16845 views