logo

கோவில்பட்டி அருகே சாலை ஓரத்தில் இருந்த தூணில் கார் மோதி விபத்து - 2 பேர் பலி 6 பேர் படுகாயம்

கோவில்பட்டி அருகே சாலை ஓரத்தில் இருந்த தூணில் கார் மோதி விபத்து - 2 பேர் பலி 6 பேர் படுகாயம்


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கயத்தாறு அருகே ஊர் அறிவிப்புபெயர் பலகை கான்கிரீட் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் இரண்டு பேர் பலியாயினர். 6 பேர்க்கு காயம் ஏற்பட்டது.

 காரைக்குடி தெற்கு வீதியை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் அரிகிருஷ்ணன் (27) இவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர் விக்கி (28) ஆகியோருடன்காரில் நேற்று திருச்செந்தூர்க்கு சாமி கும்பிட வந்தனர். காரை புதுக்கோட்டையை சேர்ந்த வெங்கடேசன் (25) என்பவர் ஒட்டி

வந்தார்.திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்ய தடை என்பதால் கன்னியாகுமரி சென்று விட்டு இன்று மாலையில் காரைக்குடிக்கு வந்து கொண்டிருந்தனர். கயத்தாறு அருகே அரசன்குளம் வந்த போது எதிர்பாரதவிதமாக கார் ஊர் பெயர் பலகை கான்கிரீட் தூண் மீது மோதியது.இதில் அரிகிருஷ்ணன் ஸநண்பர் விக்கி (28) மற்றும் அவருடைய தாத்தா கணபதி (88) ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். அரிக்கிருஷ்ணன், அவரது மனைவி திவ்ய பாரதி (27), அரி கிருஷ்ணன் மகள் கிருபாலனி (2), அரிகிருஷ்ணன் சீதா (53), உறவினர் காளியம்மாள் கார் டிரைவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் காயமடைந்தனர். தகவலறிந்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்றனர். காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த விக்கி, கணபதி ஆகியோர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.

1
14684 views