logo

‘உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் மனு - சாலையை சீரமைத்த கோவில்பட்டி நகராட்சி

‘உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் மனு - சாலையை சீரமைத்த கோவில்பட்டி நகராட்சி கோவில்பட்டி நகராட்சி 36வது வார்டு கருணாநிதிநகர் பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சாலையை சீரமைக்கக் கோரி மனு அளித்திருந்தார்கள். தற்போது முதலமைச்சரின் துரிதமான நடவடிக்கையின் பேரில் நகராட்சி மூலம் கருணாநிதி பகுதியில் சாலைகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கருணாநிதி நகர் பொதுமக்கள் அனைவரும் முதலமைச்சர் தனிப்பிரிவு திட்டத்திற்கும், முதலமைச்சர் அவர்களுக்கும்; நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளதாக நகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4
14687 views