logo

தமிழ்நாடு - தேனி மாவட்ட ரயில் பயணிகள் மற்றும் பயனாளர்கள் சங்க உறுப்பினர்கள் கடந்த 13 ஆண்டுகள் போராடி , இந்த போடிநாயக்கனூர் ரயில் பாதையை பெற்றும் ! இந்த ரயில்வே நிர்வாகம் பொது மக்களின் தேவைகளை அறியாது, பூர்த்தி செய்யாது ஒரு ரயில் மதுரை வரையிலும், ஒரு ரயில் மூன்று நாட்கள் சென்னை மட்டும் என்று அவர்களாகவே அறிவித்து விட்டு, மற்ற ரயில் சேவைகளை வழங்காமல் இருந்து வருவதும் இந்த தேனி மாவட்ட பொது மக்களை ஏமாற்றுவது ஏனோ ???

தேனி மாவட்ட ரயில் பயணிகள் மற்றும் பயனாளர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம் ! கடந்த - 13 ஆண்டுகள் போராடி , இந்த ரயில் பாதையை பெற்றும் இந்த ரயில்வே நிர்வாகம் பொது மக்களின் தேவைகளை அறியாது ஒரு ரயிலை அவர்களாகவே அறிவித்து அது காலை மதுரையில் இருந்து கிளம்பி மீண்டும் மாலை மதுரை செல்லும் வகையில் ஏற்பாடு செய்தது! இதில் கொடுமை என்னவென்றால் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே இயங்கும் வழியில் ஒரு சென்னை ரயிலைஅறிவித்து, அந்த ரயிலின் பின்னாலேயே இந்த ரயிலை இயக்கும் வகையில் ஏற்பாடு செய்தது .தேனி மாவட்டத்திற்கு காலை நேர ரயில் இல்லை சுமார் 700 கோடி ரூபாய் செலவழித்தும் தேனி மாவட்ட பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை! தேனி மாவட்ட மக்களை இவர்கள் என்னதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை ! நேரமாற்றம் செய்தாலும் தண்டவாளத்தின் உறுதித் தன்மை என்பது நன்றாக இருந்தால் தான் அதை அமல்படுத்த முடியும் இன்னும் மதுரை போடிநாயக்கனூர் செக்க்ஷனில் உசிலம்பட்டி மதுரை இடையே உள்ள பகுதிகளில் ரயில்களால் நிறைவாக கடக்க முடியவில்லை என்பதுதான் உண்மை! இந்த மதுரை உசிலம்பட்டி இடையே உள்ள பகுதிதான் இந்த செக்க்ஷனில் மிகப் பெரிய தலைவலியாக உள்ளது! கூடுதலாக ரயில்களை இயக்காமல் இருப்பது இதனால் தான் கடினமோ என்ற ஒரு சந்தேகமும் வருகிறது ! மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு ஆறு மாத காலங்கள் முடிவடைந்து விட்டது இருப்பினும் இந்த டி எஸ் எஸ் என்று சொல்லக்கூடிய traction substation பணி இன்னும் முடியவில்லை ஏன் ? இந்தப் பணி ஆமை வேகத்தில் அல்ல நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை ? முதலில் கோயம்புத்தூர் பகுதிகளுக்கு ரயில் இயக்காமல் இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை ? வாரம் மூன்று நாட்கள் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த சென்னை ரயில் இனி நான்கு நாட்கள் என்று மாற்ற அறிவிப்புகள் வந்தும் கூட அதை அமல்படுத்தாமல் இருப்பதன் மர்மம் தான் என்ன என்றும் தெரியவில்லை ? தேனி மாவட்ட மக்களின் தேவைகளை ஏன் நிறைவேற்ற இவர்கள் தவறி வருகிறார்கள்? இந்த மாவட்ட மக்களைப் பற்றி இவர்களும் இந்த அரசுகளும் மற்றும் ரயில்வே நிர்வாகமும் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை ? அனேகமான பயணிகள் இவர்கள் ரயில் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தும் விலகி விட்டார்கள் ! அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் வாயிலேயே பந்தல் போட்டுக் கொண்டு நமது தேனி மாவட்ட பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர் ஆட்சியாளர்களும்! மத்திய மாநில அரசுகளும்! இவற்றிற்கு எப்பொழுது விடிவுகாலம் பிறக்குமோ? என்று தெரியவில்லை! அல்லது ஏற்கனவே 13 ஆண்டுகள் போராடியது போல இன்னும் ஒரு 15 ஆண்டுகள் போராட வேண்டுமோ?...... நம் தேனி மாவட்ட பொதுமக்கள் கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டியதுதான் போல !!! ரயில்கள் வரும் என்று !!!!!!!!!!!!....................................................................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவுதுணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

123
3805 views