logo

தமிழ்நாடு - தேனி மாவட்டம், தேனியில் பெரியகுளம் சாலை ,கம்பம் சாலை, மதுரை சாலை, இந்த சாலைகளில் ஆக்கிரமிப்புகள், சாலையோர வாகன ஒலி பெருக்கி வியாபாரம் ???

தேனி மாவட்டம், தேனியில் - பெரியகுளம் கம்பம் மதுரை ரோடுகளில் ஆக்கிரமிப்பு அதிகளவில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. அதை சரி செய்வது தொடர்பாக...!!!

தேனியில் பெரியகுளம், கம்பம், மதுரை ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் மற்றும் TATA ACE, ECHO, வாகனங்கள் மூலம் பழங்கள், காய்கறிகளை வைத்து அதிக சத்தத்துடன் ஒலி பெருக்கியை வைத்து ஒரே இடத்தில் வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது, இதனால் பொதுமக்கள் நடப்பதற்கு நடைபாதையின்றி ரோடுகளில், நடக்கின்ற பள்ளி மாணவர்களுக்கும் மிகவும் இடையூறாக இருக்கிறது.இவற்றால் அக்கம்பக்கத்து கட்டிடங்களில் அதிக அளவில் கடைகளுக்கு அட்வான்ஸ், மற்றும் வாடகைகள் கொடுத்து வியாபாரம் செய்து வருகின்ற வியாபாரிகளுக்கு இந்த வாகன நிறுத்த வியாபாரத்தால் பெரும் இடைஞ்சலாக உள்ளது.இவற்றை இந்த வாகன வியாபாரிகளிடம் எடுத்துச் சொன்னால் இவற்றை கண்டு கொள்வது கிடையாது..மேலும் மேலும் வீம்பாகவே பங்களாமேடு நிழற்குடை அருகில், கள்ளர் சொசைட்டி அருகில், பெரியகுளம் சாலை .... இவற்றில் எல்லாம் இந்த வாகன விற்பனை தொந்தரவு நடந்து கொண்டுதான் இருக்கிறது.இதுபற்றி பல முறை புகார்கள் தெரிவித்தும் கூட ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறது போக்குவரத்து காவல்துறை? இந்த வாகனங்கள் மூலம் பழங்கள் காய்கறிகளை ஒரே இடத்தில் அமர்ந்து ஒலி பெருக்கியை வைத்து வியாபாரம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதா? இவைகள் போல வியாபாரம் செய்ய அனுமதி கொடுத்தால் எதற்காக கட்டிடங்களுக்கு அட்வான்ஸ் மற்றும் வாடகைகள் கொடுத்து வியாபாரம் செய்ய வேண்டும்? அவர்களும் இந்த நடைமுறையை பின்பற்றலாமே ! நகர்மன்ற கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றியும், எவ்வித நடவடிக்கைகளும் இல்லை ! பொதுமக்கள் இது போன்ற வாகன வியாபாரம் செய்து வருகின்ற ஆக்கிரமிப்பு,போக்குவரத்து நெரிசலால் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர் !எனவே பெரியகுளம், கம்பம், மதுரை, ரோடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், இந்த வாகனங்கள் மூலம் ஒலி பெருக்கியை வைத்து வியாபாரம் செய்து வருகின்ற வியாபாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கின்றனர்? இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து காவல்துறையும்? பொறுத்திருந்து பார்ப்போம்!!!,...............................................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவுதுணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

68
5593 views