logo

மத்திய, மாநில அரசுகளே !!! தேர்தல் ஆணையமே !!! ஆதார் அட்டை, பான் கார்டுடன் இணைக்க வேண்டும், ஆனால் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஏன் இணைக்க தயக்கம் ???

ஆதார் அட்டை, ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும், ஆதார் அட்டை, வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும், ஆதார் அட்டை, பள்ளித் தேர்வுகளுடன் இணைக்க வேண்டும், ஆதார் அட்டை, எரிவாயு சிலிண்டருடன் இணைக்க வேண்டும், ஆதார் அட்டை, மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும், ஆதார் அட்டை, அலுவலக வருகையுடன் இணைக்க வேண்டும், அனைத்து அரசுத் திட்டங்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது... ஆனால் ? ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஏன் இணைக்கப்படவில்லை...? என்ன காரணம் !!!

ஏனென்றால்... தந்திரமான மற்றும் சூழ்ச்சி நிறைந்த அரசியல்வாதிகள்!

ஆதார், வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டால்,

ஒரே பேர் பல வாக்குகள் போட முடியாதே என்றும்,

ஒரே பேர் இரண்டு பெயரில் வாக்களிக்க முடியாது, - போலி வாக்குகள் எல்லாம் மறைந்து போய்விடும் ரேஷன் கார்டுல போலி பெயர்களை நீக்கிய மாதிரி!

பான் கார்டுடன் ஆதார் லிங்க் செய்யலன்னா ₹10,000 அபராதம் ! அப்படின்னா வாக்காளர் அடையாள அட்டைக்கு ஏன் கட்டாயம் இல்லை? அரசுக்கு பணம் (வரி)கிடைக்காது என்பதாலா? வாக்களிப்பதற்கும் ஏன் அதை கட்டாயமாக்கவில்லை?

ஊரடங்கின்போது, அனைவரும் தடுப்பூசி போட்டோம், அதற்கு நம்முடைய ஆதார் உடனடியாக இணைக்கப்பட்டது!

அப்படியென்றால், தேர்தல் ஆணையத்தின் குதிரை ஏன் அசைவில்லாமல் நிற்கிறது? இதற்குத்தான் அவர்கள் "தூய்மையான இந்தியா" என்று பெயரிடுகிறார்களா? இதுதான் வெளிப்படையான அரசாங்கமா? விழித்தெழு, வாக்காளரே! அரசியல்வாதிகளின் மூடு மந்திரம் பார்த்தீர்களா? விரைவில் ஆதார் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்!............................................,..........................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவுதுணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

16
2531 views