logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தமிழ்நாடு - தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம், மற்றும் மெய்வழி சட்ட மையம் சார்பில் மாபெரும் வரவேற்பு !!!

மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையம் சார்பில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் அம்மா சசிகலா அவர்களின் பிரச்சார வருகையை ஒட்டி நேரில் சந்தித்தும் வெற்றி வேட்பாளர் போடி தொகுதியைச் சேர்ந்த ஐயா பத்மநாபன் அவர்களையும் ஆண்டிபட்டி தொகுதியைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர் ஐயா செல்லக்கண்ணு அவர்களையும் நேரில் சந்தித்து மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் அமைப்பின் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மற்றும் மெய்வழி மக்கள் இயக்கம் சார்பாக வரவேற்பு....
அகில இந்திய புரட்சிதலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் வெற்றி வேட்பாளர்கள், போடி பத்மநாபன், ஆண்டிப்பட்டி செல்லக்கண்ணு ஆகியோரை ஆதரித்து, போடி நகர பிரச்சார பொதுகூட்டத்திற்கு வருகை தந்த, கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களை, மெய்வழி இயக்கங்களின் தேனி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி தலைமையில் இயக்க நிர்வாகிகள் வரவேற்றனர். வேட்பாளர்கள் உடனிருந்த நிகழ்வு.........................................................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவுதுணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

8
79 views

Comment